தன்வந்திரி ஜெயந்தி நவம்பர் 5-ஆம் தேதி, தீபாவளிக்கு முன்பு பிரதோஷம் வரும் நாளன்று கொண்டாடப்படுகிறது இந்த நாளை வடஇந் தியாவில் தனதிரயோதசி என்றழைப்பார்கள்.
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டவர் மகா விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி. அவருடன் பல மூலிகைகளும் வந்தன. அவர் ஆயுர்வேதத்தின் பிதாமகன். ஆயுர்வேதத்தின் பயன்களை எல்லாருக்கும் கூறியவர் தன்வந்திரி. இவரைப் பற்றி "தன்வந்திரி சம்ஹிதா' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
நோய்களை குணப்படுத்துவதற்கு சரியான மருந்துகள் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் கீழுள்ள தன்வந்திரி பகவானின் மந்திரத் தைக்கூற வேண்டும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே
அம்ருத கலசஹஸ்தாய
சர்வாமய விநாஸனாய
த்ரைலோக்ய நாதாய
மகாவிஷ்ணவே நம:
ஒரு மனிதனின் மனதில் பயம் இருந்தால் அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது சந்திரன் பலவீ னமாக இருக்கும். அவர் அதிகமாக சிந்திப்பார். சிலருக்கு கோட்சார குரு 6, 8, 12-ல் இருந்தால் பயம் இருக்கும். உணவு ஜீரணமாகாது, மனதில் குழப்பம் உண்டாகும்.
ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது அவருடைய ஜாதக தசா காலங்கள் சரியில்லாமல் இருந்தால் பலவித நோய்கள் வரும். பணப் பிரச்சினையில் சிக்க நேரும்.
ஒருவருக்கு மாரகாதிபதி தசை நடக்கும்போது- குறிப்பாக 2-ஆம் அதிபதியின் தசை நடந்து, அஷ்டமா திபதியின் அந்தரம் நடந்தால் பலவகை யான சிக்கல்களும் உண்டாகும்.
6-ஆம் அதிபதியின் தசையில் 11-ஆம் அதிபதியின் அந்தரம் நடந்தால் பல நோய்கள் வரும். மனதில் பல பிரச்சினைகள் இருக்கும்.
ஒருவருக்கு அஷ்டமச்சனி நடக் கும்போது, கோட்சார குரு சரியில்லை யென்றால் அல்லது மாரகாதிபதியின் தசை நடந்தால் அவருக்கு நோய் களின் பாதிப்பு இருக்கும்.
ஒரு வீட்டின் வடகிழக்கு மூடியிருந்தாலும், வடகிழக்கு இருட்டாக இருந்தாலும், படுக்கையறை வடகிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ இருந்து அந்த வீட்டின் வாசல் தென்மேற்கில் இருந்தாலும் அவருக்கு பலவித நோய்கள் வரும்.
ஒரு வீட்டின் மத்திய பகுதியில் நீர்த் தொட்டி அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்து, அந்த வீட்டின் தென்மேற்கு திசையில் கழிவுநீர் அறை அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தால் அவருக்கு பலவகையான நோய்களின் பாதிப்பு இருக்கும்.
ஒரு வீட்டின் சுவரில் நீர் கசிந்தால், அந்த வீட்டின் படுக்கையறையின் வண்ணம் நீலம் அல்லது பச்சையாக இருந்தால் நோய்கள் வரும். சீதளம் பிடிக்கும்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரியில்லாமலிருந் தால், அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும் போது அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் சனி பகவான் 6, 8, 12-ல் இருந்து செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவருக்கு காலில் நோய் உண்டாகும். அடிக்கடி மனநோய் வரும். வாய்வுப் பிரச்சினை, வயிற்றுப்பிரச்சினை இருக்கும். ஒரு ஜாதகத்தில் 6-ல் சனி இருந்து, 2-ஆம் பாவத்தில் செவ்வாய் அல்லது செவ்வாயுடன் ராகு அல்லது சூரியன் இருந்தால், அவரிடம் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது. அதனால் பித்தம், வாய்வுத் தொல்லை உண்டாகும்.
பரிகாரங்கள்
தீபாவளிக்கு முன்பு வரும் பிரதோஷ நாளன்று தன்வந்திரி பகவான் அல்லது மகாவிஷ்ணுவின் படத்தை வைத்து, அதற்கு பூ, பழம் வைத்து, தன்வந்திரியின் மந்திரத்தைக் கூறி பூஜை செய்யவேண்டும். பிரசாதத்தைப் பிறருக்குத் தரவேண்டும். தன்வந்திரி படத்தை வடக்கு திசையில் வைத்து பூஜைசெய்ய வேண்டும். பூஜை செய்பவரின் முகம் வடக்கு நோக்கி இருக்கவேண்டும். பூஜையின்போது மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை நிறங்களில் ஆடை அணிவது நன்று. அந்த நாளன்று இயன்றால் விரதமிருக்கலாம். வீட்டில் தன்வந்திரியின் யந்திரத்தை வைத்தும் வழிபடலாம்.
படுக்கையறையில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் நீக்கிவிட வேண்டும். வசிக்கும் இடத் திற்கு அருகில் உள்ள பெருமாள், ரங்கநாதர், ராமர் ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவின் மந்திரத்தைக் கூறவேண்டும். நோய்களிலிருந்து விடுபட நினைப்பவர்கள் எந்த விஷ்ணுவின் ஆலயத்திற்கும், கிருஷ்ணரின் ஆலயத்திற்கும் சென்று வழிபடலாம். தன்வந்திரி கோவில் சென்றும் வழிபடலாம்.
செல்: 98401 11534